Home தமிழகம் நரசிம்ம ஜெயந்தி-  சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

நரசிம்ம ஜெயந்தி-  சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோயில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

12
0

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கம் சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மன் கோயிலில் தேரோட்டம் இன்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்பாகக் கருதப்படுவது நரசிம்மர் அவதாரம். அவதார தினம் நரசிம்மர் ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைணவ தலங்களில் எழுந்தருளியுள்ள நரசிம்மருக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். புதுவையை அடுத்த தமிழக பகுதியான சிங்கிரிகுடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவைவையொட்டி நாள்தோறும் காலையில் சுவாமி பல்லக்கு புறப்பாடும், மாலையில் வீதி உலாவும் நடந்தது.

புதுச்சேரி அடுத்த அபிஷேகப்பாக்கம் சிங்கிரி குடி லட்சுமி நரசிம்மன் கோயிலில் தேரோட்டம் இன்று  நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Previous articleபுதுச்சேரி மக்களுக்கு பொய்யான வாக்குறுதி தந்து பாஜக ஏமாற்றி விட்டது: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Next articleநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் குறுவை சாகுபடிக்கு நாற்றாங்கால் தயார்படுத்தும் பணி