Home தமிழகம் தென்னையை தாக்கும் இலை கருகல்நோய்: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

தென்னையை தாக்கும் இலை கருகல்நோய்: கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

10
0

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், தென்னையை தாக்கும் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னைகளில், ஆண்டுதோறும் வாடல்நோய் தாக்கம் என்பது தொடர்ந்துள்ளது. மேலும், அன்மையில் தென்னைகளில் வெள்ளை ஈ நோய் தாக்குதலாலும், இலை கருகல் நோயாலும் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர். இவ்வாறு தென்னையில் ஏற்படும் நோய்களால், அதனை வெட்டி அப்புறப்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, தென்னைகளில் பரவும் நோய்களை முறையாக கண்டறிந்து, வேளாண் அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பல்வேறு நோய்கள் தாக்கப்பட்டு பயன்படாத மற்றும் காய்ப்புத்திறன் குறைந்த தென்னை மரங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் தென்னை விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டில், ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் என தொடர்ந்து தென்மேற்கு பருவமழை பல மாதமாக பெய்துள்ளது. இதனால் சில கிராமங்களில் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களில் உள்ள இலைகள் பச்சை நிறத்தில் மாற துவங்கியது. ஆனால் இந்த நிலை கடந்த ஜனவரி மாதம் வரை மட்டுமே நீடித்துள்ளது. அதன்பின் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியதிலிருந்து, பல தென்னைகளில் மஞ்சள் நிறத்தில் இலை கருகல் நோய் பரவ ஆரம்பித்தது. தற்போதும் சில கிராமங்களில் உள்ள தென்னை மரத்திற்கு இந்நோய் பரவல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், சில கிராமங்களில் மட்டும் தென்னைகளில் இலை கருகல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதில், பூஞ்சான நோய்  தாக்கப்பட்ட மரத்தின் மட்டையிலிருந்து, காற்றின் மூலம் மற்ற மட்டைகளுக்கு எளிதாக பரவுகிறது. இதனை தடுக்க, தென்னை மரங்களில் நோய் முற்றிய அடிமட்டை இலைகளை வெட்டிவிட வேண்டும். மேலும், பரிந்துரைக்கப்பட்ட ரசாயன உரங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றரை கிலோ பொட்டாஷ் தலா ஒரு மரத்திற்கு இடுவதால், தென்னையில் இலை கருகல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், மஞ்சள் நிறம் மாறும். அதற்கான எளிய முறையை கையாண்டு, தென்னை கருகல்நோய் தாக்குதலை தடுக்க விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் முறையான ஆலோசனை பெற்று பயன்பெற வேண்டும்’ என்றனர்.

Previous articleதிருக்காம்புலியூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Next articleஅரவக்குறிச்சி பேரூராட்சியில் கோடைகால வறட்சியை சமாளிக்க தீவிர நடவடிக்கை