Home தமிழகம் திருநெல்வேலி தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்து: 4 பேரை மீட்கும் பணி தீவிரம்

திருநெல்வேலி தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்து: 4 பேரை மீட்கும் பணி தீவிரம்

9
0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியுள்ள இருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கல்குவாரியில் இன்று அதிகாலை நேரத்தில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துள்ளானது. பாறைகள் உருண்டதில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இரண்டு பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரம் என்பதாலும் சுமார் 300 அடிக்கு மேலான பள்ளம் என்பதாலும் மீட்பு பணி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கல்குவாரியைச் சார்ந்த சங்கரன் என்பவரிடம் முன்னீர்பள்ளம் பேலீஸார் விசாரணை நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள தனியார் குவாரியில் பாறைகள் உருண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கியுள்ள இருவர் காயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

Previous articleநீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணை சுற்றுலாதலமாக்கப்படுமா?.. முதல்வருக்கு, பொதுமக்கள் கோரிக்கை
Next articleதாமஸ் கோப்பை இந்தியா முதன் முறையாக வென்று சாதனை