Home தமிழகம் திருநெல்வேலி கல்குவாரி விபத்து; ரூ.1 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

திருநெல்வேலி கல்குவாரி விபத்து; ரூ.1 லட்சம் நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

19
0

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேற்று (மே 14) இரவு சுமார் 11.30 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறு நபர்கள் (முருகன், விஜய், செல்வம், முருகன், ராஜேந்திரன், செல்வகுமார்) சிக்கியுள்ளனர். அதில் இருவர் முருகன் மற்றும் விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இவ்விபத்தில் சிக்கியுள்ள செல்வம், முருகன், செல்வகுமார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையம்கோட்டை வட்டம், தருவை கிராமம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். 

Previous articleநீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பு அணை சுற்றுலாதலமாக்கப்படுமா?.. முதல்வருக்கு, பொதுமக்கள் கோரிக்கை
Next articleதாமஸ் கோப்பை இந்தியா முதன் முறையாக வென்று சாதனை