Home தமிழகம் தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு மாவட்ட வருவாய் அலுவலர் விவசாயிகளுடன் கலந்தாய்வு

தமிழக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு மாவட்ட வருவாய் அலுவலர் விவசாயிகளுடன் கலந்தாய்வு

14
0

காஞ்சிபுரம்: தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா  தலைமையில்கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதையொட்டி, வேளாண்மை (ம) உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய, விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய மின்வேலி, சூரிய கூடார உலர்த்தி, மரச்செக்கு இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம். நுன்னீர்ப்பாசன அமைப்புகள், நிலத்தடி நீர் ஆய்வு பண்ணைக் குட்டை சூரிய மின் மோட்டார், வேளாண் கருவிகள் வாடகை திட்டம், பழுதான மின்மோட்டார் புதுப்பித்தல் திட்டம், துணை வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் விஷார் பகுதியை சேர்ந்த விவசாயி ஜெயவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சூரிய சக்தியால் இயங்கும் மோட்டார் பம்பு செட்டுகள் அரசின் 70 சதவீத மானியத்துடன் 5 குதிரைத்திறன் கொண்ட சோலார் பம்ப் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் முசரவாக்கம் பகுதியில் விவசாயி அரசு விவசாயி என்பவருக்கு சொந்தமான இடத்தில் சூரிய மின்வேலி, அமைக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலை மலபயிர்களின் நீர்ப்பாசனத்துக்கும் சொட்டு நீர் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதையொட்டி, தாமலை சேர்ந்த விவசாயி பூங்குழலியின் பழ மரங்களின் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டு நீர் பாசன திட்டத்தை பார்வையிட்டார். இந்த சுற்றுப்பயணத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) கணேசன், செயற்பொறியாளர் அருண், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன் ஆகியோர் இருந்தனர்.

Previous articleமாடம்பாக்கத்தில் பகுதி நேர நூலகம் சீரமைப்பு
Next articleசெங்கல்பட்டு அருகே பரபரப்பு அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்