Home சினிமா ஓரே நாளில் இரண்டு வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகும் ‘ஆச்சார்யா’ ‘ஆர்ஆர்ஆர்’ 

ஓரே நாளில் இரண்டு வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகும் ‘ஆச்சார்யா’ ‘ஆர்ஆர்ஆர்’ 

19
0

மே 20-ம் தேதி 'ஆச்சார்யா' மற்றும் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண் நடித்த திரைப்படம் 'ஆச்சார்யா' இந்த படம் கடந்த மாதம் 29-ம் தேதி வெளியானது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படம் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. 140 கோடியில் தயாரிக்கப்பட்டு வெறும் 75 கோடி ரூபாய்தான் வசூல் செய்தது.இந்த நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியிருந்தது. அதன்படி , படம் வெளியாகி 20 நாட்கள் கழித்து வரும் மே 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது.

மே 20-ம் தேதி  ‘ஆச்சார்யா’ மற்றும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படங்கள் வெவ்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. 

Previous articleவாடிகனில் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம்: அமைச்சர் பங்கேற்பு
Next articleஇத்தாலி ஓபன் டென்னிஸ்; 1000வது வெற்றியுடன் பைனலில் ஜோகோவிச்