Home தமிழகம் உரச்செலவினை குறைக்கும் பசுந்தாள் உரம்: வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

உரச்செலவினை குறைக்கும் பசுந்தாள் உரம்: வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை

6
0

புதுக்கோட்டை: ​ புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள், தங்கள் இரசாயண உரங்களை பயன்படுத்தும் பொழுது ஒருங்கிணைந்த உர மேலாண்மையினை கடைபிடிப்பதனால் உரச் செலவை குறைப்பதோடு அதிக மகசூல் பெறலாம். ​குறுவைச் சாகுபடிக்கு முன்னதாக விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிர்கள் சாகுபடி செய்து மடக்கி உழ வேண்டும்.இதனால் 25 சத தழைச்சத்து உரங்களை குறைத்து பயிர்களுக்கு இடலாம். வாய்ப்புள்ள இடங்களில் அசோலா எனப்படும் உயிர் உரத்தினை வளர்த்து ஒரு ஏக்கருக்கு 100 கிலோ இடவேண்டும். இதனை வளர்ந்தவுடன் 25 நாட்கள் கழித்து மண்ணில் சீர்மிகு நெல் சாகுபடி செய்த வயல்களில் கோனோவீடர் எனப்படும் களைக்கருவிக் கொண்டும் மற்றும் சாதாரண நடவு வயல்களில் கால்களால் மண்ணில் மிதித்து விட வேண்டும். இதனால் மண் வளம் அதிகரிப்பதோடு தழைச்சத்து உரம் தேவைக்கேற்ப பயிர்களுக்கு மண்ணிலிருந்து கிடைக்கிறது.தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டு மேலுரம் இடும் தருணத்தில் உள்ள கோடை நெல் சாகுபடி மற்றும் இதர பயிர்களுக்கு யூரியா போன்ற தழைச்சத்து தரும் உரங்களை மண்வள அட்டை பரிந்துரைப்படி இட வேண்டும், மேலும் தேவைக்கு தகுந்தவாறு குறுகிய கால நெல் இரகங்களுக்கு ஒரு தடவைக்கு 23 கிலோவிற்கு மேல் இடக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மட்டுமே இட வேண்டும். யூரியா, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகிவற்றை 5: 4:1 என்ற விகிதத்தில் கலந்து நெற்பயிருக்கு முதல் மேலுரமாக இடலாம். இதனால் தழைச்சத்து பயன்பாட்டுத் திறன் அதிகமாகும். மண்வள அட்டை பெறாத விவசாயிகள் தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மண் மாதிரிகள் சேகரிப்பு சிறப்பு முகாம்களில் கலந்துக் கொண்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ​பயிரின் வளர்ச்சி நிலைக்கு தகுந்தவாறு உரங்களை மூன்று அல்லது நான்கு தடவையாக பிரித்து இட வேண்டும். உரங்களை தேவைக்கு அதிகமாக இடுவதனால் வளர்ச்சி பருவங்களில் பயிரில் தழைச்சத்து அதிகமாக இருக்கும். இதனால் இலைச்சுருட்டு புழு, தண்டு துளைப்பான், புகையான் போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் குலைநோய் ஆகியவற்றின் தாக்குதல் அதிகமாவதால் பயிர் மகசூல் குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும். ​எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த உர மேலாண்மையினை கடைபிடித்து சாகுபடி செலவினை குறைப்பதன் மூலம் அதிக லாபம் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous articleஉசிலம்பட்டி அருகே கி.பி. 9ம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு
Next articleநெல்லை முன்னீர்பள்ளம் அருகே அடைமதிப்பான் குளம் கிராமத்தில் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு?