Home விளையாட்டு இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அசத்தல்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் அசத்தல்

12
0

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை தக்கவைத்தார். இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (27 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதிய ஸ்வியாடெக் (20 வயது, முதல் ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 22 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் ஸ்வியாடெக் தொடர்ச்சியாக 5வது தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன், தொடர்ச்சியாக 25 வெற்றிகளைப் பதிவு செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleசூப்பர் கிங்சை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்
Next articleஆஸி. முன்னாள் நட்சத்திரம் சைமண்ட்ஸ் விபத்தில் பலி