Home தமிழகம் விசாரணை கைதிகள் மர்ம மரணம் | உறுதியான நடவடிக்கை தேவை – விஜயகாந்த்

விசாரணை கைதிகள் மர்ம மரணம் | உறுதியான நடவடிக்கை தேவை – விஜயகாந்த்

9
0

சென்னை: விசாரணை கைதிகள் மர்ம மரணம் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக விசாரணைக் கைதிகள் மர்மமான முறையில் மரணம் அடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் 18-ம் தேதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து நடந்த விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில்13 இடங்களில் காயங்கள் இருந்ததால், காவலர்கள் அடித்து துன்புறுத்தியதாலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

விசாரணை கைதிகள் மர்ம மரணம் விவகாரத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Previous articleகேன்ஸ் படவிழாவில் வெளியாகும் பா.இரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ முதல் பார்வை
Next article6 ஆண்டுகளுக்கு முன் கோலி – டி வில்லியர்ஸ் ஆடிய வெறியாட்டம்! நினைவிருக்கிறதா?