Home தமிழகம் மதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு

மதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு

14
0

மதுரை: மதுரையில் அதிமுக கவுன்சிலர்கள் திமுகவினருடன் அதிக நெருக்கம் காட்டுவதால், மாநகராட்சியில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும், மாநகராட்சியில் தங்களின் உரிமையையே கேட்டுப்பெற முடியாதவர்கள் மக்கள் பிரச்சினையை எப்படி எதிரொலிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் அதிமுகவிற்கு 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில், மாநகராட்சியின் எதிர்கட்சித் தலைவராக 64-வது வார்டு கவுன்சிலரும், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளருமான சோலை எம்.ராஜாவும், எதிர்கட்சி துணைத்தலைவராக 48-வது வார்டு ரூபிணி குமார், கொறடாவாக 45-வது கவுன்சிலர் கே.சண்முகவள்ளி உள்ளனர். கடந்த கால மதுரை மாநகராட்சி வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது திமுக, அதிமுக யார் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்றினாலும் மாநகராட்சி கூட்டங்களில் ஆளும்கட்சி, எதிர்கட்சியாக இரண்டு கட்சி கவுன்சிலர்களும் ஆக்ரோஷமாக மோதி கொள்வார்கள். மக்கள் பிரச்சினைகள் வெளிப்படுத்தப்படும். அதற்கான தீர்வுகளும் ஒரளவு கிடைக்கும். மாநகராட்சி கூட்டங்களில் மோதிக்கொண்டாலும் திரைமறைவில் இருகட்சி கவுன்சிலர்களும் நட்பு வைத்திருப்பார்கள். ஜெயலலிதா, கருணாநிதி இருந்தவரை பொது வெளியில், மாநகராட்சி கூட்டங்களில் வெளிப்படையாக நட்பு பாராட்ட மாட்டார்கள். ஆனால், தற்போது திமுக, அதிமுக கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் நேரடியாகவே நட்பு பாராட்டுகிறார்கள். அந்த நட்பு பாராட்டுதலே தற்போது மாநகராட்சியில் அதிமுகவின் கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் அமைந்துவிட்டது.

மதுரையில்  அதிமுக  கவுன்சிலர்கள் திமுகவினருடன் அதிக நெருக்கம் காட்டுவதால், மாநகராட்சியில் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்றும், மாநகராட்சியில் தங்களின் உரிமையையே கேட்டுப்பெற முடியாதவர்கள் மக்கள் பிரச்சினையை எப்படி எதிரொலிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Previous articleபுதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு
Next article‘கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது’ – அதிபர் கிம் ஜாங் உன்