Home தமிழகம் புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்புநிற வண்ணம் பூசி அழித்து...

புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் பெயர் பலகை: கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு

12
0

புதுச்சேரி: ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில் இரவில் கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சாலைகள் மேம்படுத்துதல், பாரம்பரிய கட்டிடங்கள் புனரமைப்பு, பெரிய வாய்க்கால்களுக்கு சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஒயிட் டவுன் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிகாட்டி பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, புதுச்சேரி ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை நெடுகிலும் பெரிய வாய்க்கால் அருகே உள்ள சாலை சந்திப்பு பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரி ஒயிட் டவுன் வீதிகளில் காவி நிறத்தில் வைக்கப்பட்ட பெயர் பலகைகளில்  இரவில் கருப்புநிற வண்ணம் பூசி அழித்து மர்ம நபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Previous articleதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வடை, பாயாசத்துடன் 3 ஆயிரம் பேருக்கு தினமும் அன்னதானம்; விரைவில் அமலுக்கு வருகிறது
Next articleமதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு