Home சினிமா பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா

பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா

23
0

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சர்காரு வாரி பாட்டா' தெலுங்கு திரைப்படம் வெளியான 2 நாட்களில் 69 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'சர்காரு வாரி பாட்டா'. இந்த திரைப்படம் கடந்த 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட் அடித்தன. இதனிடையே, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் பாபு படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ தெலுங்கு திரைப்படம் வெளியான 2 நாட்களில் 69 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Previous articleரஷ்ய – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்கள் ஆலோசனை: உக்ரைன் போர் தொடங்கியபின் முதன்முறையாக பேச்சு
Next articleகேரளாவைப் போன்று தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து