Home தமிழகம் பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து இறக்குமதி: மதுரையில் இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.85

பற்றாக்குறையை சமாளிக்க ஆந்திராவில் இருந்து இறக்குமதி: மதுரையில் இரண்டாம் தர தக்காளி விலையே கிலோ ரூ.85

11
0

மதுரை; உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் இரண்டாம் தர தக்காளி விலையே இன்று ரூ.85 விற்பனையானது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தக்காளி வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

அன்றாட சமையலில் தக்காளி அத்தியாவசிய காய்கறியாக உள்ளது. அதன் விலை திடீரென்று உயந்து, குறைந்து வந்தாலும் பெரும்பாலான நாட்களில் கிலோ ரூ.5 முதல் ரூ.15 வரை நிலையாக காணப்படும். ஆனால், கரோனாவுக்கு பிறகு தக்காளி விலையை நிர்ணயிக்கவே முடியவில்லை. திடீரென்று கிலோ ரூ.100க்கு உச்சமாக சென்று திடீரென்று கிலோ ரூ.5க்கு குறைகிறது. கடந்த சில மாதம் முன் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை நீண்ட நாள் இருந்தநிலையில் சமீப காலமாகதான் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விலை இருந்தது.

உள்ளூர் உற்பத்தி குறைந்ததால் பற்றாக்குறையை சமாளிக்க கர்நாடகா, ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்தும் இரண்டாம் தர தக்காளி விலையே இன்று  ரூ.85 விற்பனையானது. அதனால், நடுத்தர, ஏழை மக்கள் தக்காளி வாங்க முடியாமல் கவலையடைந்துள்ளனர்.

Previous articleஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளை; ரயில்வே கேட்டை உடைத்து தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள்
Next articleதமிழகத்தில் புதிதாக 35 பேருக்கு கரோனா பாதிப்பு