Home தமிழகம் திருத்தணி ரயில்வே சுரங்கப்பாதை பிரச்னைக்கு தீர்வு; மக்கள் மகிழ்ச்சி

திருத்தணி ரயில்வே சுரங்கப்பாதை பிரச்னைக்கு தீர்வு; மக்கள் மகிழ்ச்சி

11
0

திருத்தணி: திருத்தணி ரயில்வே சுரங்கப்பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாணப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள தானியங்கி ரயில்வே கேட் வழியாக திருத்தணி அரசு மருத்துவமனை, அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஜோதிநகர் மற்றும் கீழ்பஜார் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். ரயில்வே கேட்டை அடிக்கடி மூடினால், அவசர நிமிர்த்தம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வாகனங்களில் செல்லும்போதும் சிரமப்பட்டனர். இதனால் பழைய தர்மராஜா கோயில் தெரு, சதாசிவ லிங்கேஸ்வரர் கோயில் எதிரே ரயில்வே சுரங்கப் பாதை வழியாக சென்று வந்தனர். இந்த சுரங்கப்பாதையில், கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.இந்த நிலையில், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, ஆணையர் ராமஜெயம், பொறியாளர் சண்முகம், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ் ஆகியோர் மேற்கண்ட பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு முடிவு எடுத்தனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையிடம் உரிய அனுமதி பெற்று சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்காமல் நிற்பதற்கு ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் கழிவு தொட்டி மற்றும் சுரங்கப்பாதையில் சிமெண்ட் தளத்தால் கால்வாய் சீரமைக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் சுரங்கப்பாதையில் கழிவு நீர் தேங்கி நிற்காது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Previous articleதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து
Next articleதிருவள்ளூர் அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் 40 சவரன், ரூ.6 லட்சம் கொள்ளை