Home உலகம் தற்காலிக பாலம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் ஆற்றில் சின்னாபின்னமான ரஷ்ய ராணுவம்

தற்காலிக பாலம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் ஆற்றில் சின்னாபின்னமான ரஷ்ய ராணுவம்

12
0

கீவ்: உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 80வது நாளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை  பிடித்து தனி நாடாக அறிவிக்க, அது எடுத்து வரும் முயற்சிகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதன் மூலம், ரஷ்ய படைகளின் முன்னேற்றமும், வெற்றியும் தடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்.  டான்பாஸ் மாகாணத்தில்  ஓடும்  சிவர்ஸ்கி என்ற ஆற்றை தற்காலிக பாலம் அமைத்து ரஷ்ய படைகள் கடக்க முயற்சி செய்தன. அப்போது, உக்ரைன் ராணுவம்  ஏவுகணை மூலம் அந்த பாலத்தை தகர்த்து, கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில், ரஷ்ய ராணுவத்தின் 100க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  இந்த தாக்குதல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில், ஆற்றுப் பகுதியில் பாலமும், ரஷ்ய ராணுவ வாகனங்களும் சின்னாபின்னமாகி கிடக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. உக்ரைனின் இந்த தாக்குதல், ரஷ்ய ராணுவத்துக்கு  மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இதுவரை, இந்த பாலத்தை ரஷ்ய ராணுவம் 3 முறை கடக்க முயற்சி செய்துள்ளது. அவை அனைத்தையும் உக்ரைன் ராணுவம் முறியடித்து உள்ளது.

Previous articleநாளை மறுநாள் நாடாளுமன்றம் கூடும் நிலையில் ரணில் அமைச்சரவையில் 4 பேர் மட்டும் பதவியேற்பு: பிரதான எதிர்க்கட்சிக்கு அழைப்பு
Next articleஷேக் கலிபா மறைவு யுஏஇ புதிய அதிபர் ஒரு மனதாக தேர்வு