Home தமிழகம் தஞ்சையில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்: உதவி வேண்டி அரசுக்கு...

தஞ்சையில் 24 மணி நேரமும் ஆக்சிஜன் செறிவூட்டியால் உயிர் வாழும் இளம்பெண்: உதவி வேண்டி அரசுக்கு கோரிக்கை

9
0

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீறல் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1,500 செலவு செய்து ஆக்சிஜன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் உறவினர்கள்.

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுவேதா(19). இவர் தன்னுடைய பெரியப்பா கூத்த பெருமாள் வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ப்ளஸ் 2 படிப்பை முடித்த இவர், கல்லூரியில் படிக்க முயற்சி செய்தார். அப்போது உடல்நிலை சரியில்லாமல் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டு வடம் வளைந்ததால், நுரையீறல் சுருங்கி விட்டதாகவும், இனிமேல் மூச்சுத்தினறல் அதிகம் இருக்கும், எனவே அவருக்கு 24 மணி நேரமும் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த உறவினர்கள். வீட்டிலிருந்தபடியே அவருக்கு ஆக்ஜிசன் செறிவூட்டியை தினமும் ரூ.1500 செலவு செய்து, வாடகைக்கு எடுத்து அந்த இளம் பெண் சுவாசிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு கிராமத்தில் நுரையீறல் கோளாறு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு தினமும் ரூ.1,500 செலவு செய்து ஆக்ஜிசன் மூலம் சுவாசிக்க உதவி செய்து வருகின்றனர் உறவினர்கள். 

Previous articleகேரளாவைப் போன்று தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் கருத்து 
Next article‘தைரியம்னா தேடி போய் அடிக்கிறது’ – வெளியானது ‘தி வாரியர்’ படத்தின் டீசர்