Home தமிழகம் தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி: மேம்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி: மேம்பாட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

12
0

சென்னை: சென்னையில் உள்ள தசைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தசைத்திறன் குறைபாடுள்ளோர்க்கான சென்னை சிறப்பு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட பள்ளிக் கட்டடம் மற்றும் கூடைப்பந்தாட்ட அரங்கம், பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கிய வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் நினைவாக கல்வெட்டு ஆகியவற்றை திறந்து வைத்து, அக்குழந்தைகளுக்கு மருத்தவ உபகரணங்களை வழங்கி, மின்தூக்கி வசதியுடன் கூடிய சிறப்பு பேருந்தின் சேவையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 14) தொடங்கி வைத்தார்.

சென்னையில் உள்ள தசைத்திறன் குறைபாடுடையோருக்கான  சிறப்பு பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Previous articleநீலகிரி மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் நாளை அமல்
Next articleமார்க்கெட் நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு