Home தமிழகம் தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை

தக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை

11
0

திருப்பூர்: தக்காளி விலை உயர்வால் தங்களுக்கு பயனில்லை என தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக, பல்வேறு மாவட்டங்களில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்த நிலையில், தக்காளி விலையும் உயா்ந்தது. விளைச்சல் அதிக அளவில் இருந்ததால் கடந்த மாதம் வரை ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை விற்கப்பட்டது. பின்னா் பரவலாக மழை பெய்ததன் காரணமாக, தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென, கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை 28 கிலோ கொண்ட ஒரு தக்காளி டிப்பர் ரூ. 300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 5 மடங்கு உயர்ந்து, ரூ. 1600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை உயர்வால் தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை என்றும், கிடு, கிடு வென உயரும் விலையால் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Previous article‘‘உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன்’’- லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலைக்கு முன் வீடியோ வெளியீடு
Next articleசிங்களர் பசி கண்டு மனித நேயத்துடன் உதவும் தமிழ்நாட்டின் முதல்வருக்கு நன்றி: சிங்கள வார ஏடான மவ்பீமா புகழாரம்