Home தமிழகம் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி-கலெக்டர் துவக்கி வைத்தார்

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி-கலெக்டர் துவக்கி வைத்தார்

9
0

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நேற்று குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு முடிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை முற்றிலும் தடுப்பதற்காக மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. குழந்தை திருமணம் குற்றமென அனைவரும் உணர வேண்டும். குழந்தை திருமணம் செய்தால் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர். 18 வயது முடியும் முன் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தவேண்டும். ஆணிற்கு 21 வயதிற்கு மேலும், பெண்ணிற்கு 18 வயதிற்கு மேலும் திருமணம் நடத்தப்பட வேண்டும். குழந்தை திருமணம் செய்தால் 2 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழந்தை திருமணம் குறித்த தகவல் அறிந்தால், 1098 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் அனைவரும், குழந்தை திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாத்து, குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.  பேரணியில் அரசு ஆடவர் கலைக்கல்லூரி, கேஇடி பாலிடெக்னிக் கல்லூரி, சிவகாமியம்மாள் கல்லூரி, அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி, பிஎஸ்வி கலைக்கல்லூரி, கொன்சாகா கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி மாணவிகள், ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர். மாலதி நாராயணசாமி, ஏடிஎஸ்பி சங்கு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். கோவிந்தன், டிஎஸ்பி விஜயராகவன், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் சரவணன், ஒருங்கிணைநத குழந்தை வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஜெயந்தி, ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் சர்வகலா, மாவட்ட சமூகநல உதவியாளர் சந்தோஷ்பாபு, சமூகநல விரிவாக்க அலுவலர் ஜெயா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Previous articleமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா விடிய விடிய காளைகளை இழுத்த வாலிபர்கள் விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு
Next articleவெளிநாட்டில் இருந்து அனுமதி வராததால் சூளகிரியில் இருப்பு வைத்திருந்த 70 டன் வெங்காயம் அழுகி நாசம்-மழையால் வீணானதாக விவசாயிகள் கவலை