Home தமிழகம் கார் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

கார் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு

11
0

மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பாடசாலை தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் கபிலன்(22), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கபிலன் நேற்று காலை திருக்கழுக்குன்றம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி காரை ஓட்டிச் சென்றார்.

கீரப்பாக்கம் அருகே கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே செங்கல்பட்டு பகுதியிலிருந்து கல்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற கபிலன் உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பாடசாலை தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் கபிலன்(22), தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கபிலன் நேற்று காலை திருக்கழுக்குன்றம் பகுதியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி காரை ஓட்டிச் சென்றார்.

Previous articleமக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணம் உயர்வு குறித்து முதல்வர் முடிவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
Next articleகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்