Home உலகம் ‘கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது’ – அதிபர் கிம் ஜாங் உன்

‘கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது’ – அதிபர் கிம் ஜாங் உன்

15
0

பியொங்யாங்: வட கொரியாவில் காய்ச்சல காரணமாக 21 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவிட்- 19 பரவல் வட கொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும், நாடு தொற்றுநோய் பரவலுக்கு எதிராக பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று உலுக்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரத்தில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் அவசரநிலை ஊரடங்கு அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவில் 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் நேற்று தெரிவித்திருந்தது. ஆனால் இறந்தவர்கள் கரோனா காரணமாக உயிரிழந்தார்களா என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை.

வட கொரியாவில் காய்ச்சல காரணமாக 21 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவிட்- 19 பரவல் வட கொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும்,  நாடு தொற்று நோய் பரவலுக்கு எதிராக பெரிய போராட்டத்திற்கு தயாரக வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.  

Previous articleமதுரை மாநகராட்சியில் ‘பவர்’ இழக்கும் அதிமுக: திமுகவினருடன் நெருக்கம் காட்டும் கவுன்சிலர்களால் பின்னடைவு
Next articleகாரில் கடத்திய 250 கிலோ செம்மரக்கட்டை பறிமுதல்