Home தமிழகம் ‘‘உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன்’’- லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி...

‘‘உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன்’’- லாட்டரியில் ரூ.62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலைக்கு முன் வீடியோ வெளியீடு

11
0

ஈரோடு: ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரியால், ரூ 62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி, தற்கொலைக்கு முன்பாக திமுக கவுன்சிலரின் கணவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு எல்லப்பாளையம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). நூல் வியாபாரியான இவர், நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்த ராதாகிருஷ்ணன், அதில் தனது தற்கொலைக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார். வீடியோ பதிவில் ராதாகிருஷ்ணன் பேசும்போது, ‘எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள். கருங்கல்பாளையம் கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்தில். இவர் லாட்டரி ஏஜென்சி நடத்தி வருகிறார். இதுபோன்று நான் இறப்பதற்கு அவர்தான் காரணம். லாட்டரியால் நான் 62 லட்ச ரூபாயை இழந்து விட்டேன். என்னால் தாங்கமுடியவில்லை. நான் இன்னும் உயிரோடு இருந்தால், லாட்டரி வாங்கிக் கொண்டே இருப்பேன். பைத்தியமாக இருப்பேன்.

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட லாட்டரியால், ரூ 62 லட்சத்தை இழந்த நூல் வியாபாரி, தற்கொலைக்கு முன்பாக திமுக கவுன்சிலரின் கணவர் பெயரைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழகத்தில் இதுவரை யாருக்கும் தக்காளி வைரஸ் நோய் இல்லை: திருவாரூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
Next articleதக்காளி விலை கிடு கிடுவென உயர்வு: தமிழக விவசாயிகளுக்கு பலன் இல்லை