Home உலகம் இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

இலங்கை: ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

14
0

கொழும்பு: ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நெருக்கடியான சூழலில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர், ஏற்கனவே 5 முறை பிரதமராகவும், 2 முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 உறுப்பினர்கள் ஆதரவு வேண்டும். பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக பதவியேற்று இரண்டு நாள் கழித்து அவரின் அமைச்சரவையில் புதிதாக நான்கு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Previous articleபுதுச்சேரி வீதிகளில் காவி நிறத்தில் பெயர்பலகை: கருப்பு மை பூசி அழித்தனர்
Next articleமூடி மறைக்கும் தந்திரம் எடுபடவில்லை வட கொரியாவில் கொரோனா அலை: 2 வாரத்தில் 5 லட்சம் பேர் பாதிப்பு