Home தமிழகம் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மேலும் 2 துப்பறியும் நாய்கள்

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு மேலும் 2 துப்பறியும் நாய்கள்

13
0

ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை எளிதாகக் கண்டுபிடிக்க ஏதுவாக சமீபத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திலிருந்து டோனி, ரீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது ஆவடி காவல் ஆணையரகத்தில் புதிதாக டாபர்மேன், லேப்ரடார் வகையைச் சேர்ந்த 2 நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளன. அந்த நாய்க் குட்டிகளுக்கு டாப்பி (DOBBY) மற்றும் பின் (FINN) என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று பெயர் சூட்டினார்.

சமீபத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திலிருந்து டோனி, ரீட்டா, ஜான்சி ஆகிய 3 மோப்ப நாய்கள் ஆவடி காவல் ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

Previous articleகாஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூன் 1 முதல் வருவாய் தீர்வாயம்
Next articleஇலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை கைது செய்ய உத்தரவிடக்கோரி கொழும்பு நீதிமன்றத்தில் மனு