Home மற்றவை க்ரைம் ஆன்லைனில் நாம் ஒன்றாக இருக்கும் படம் வெளியிடுவேன் என கூறி பெண்ணிடம் 55 சவரன் நகைகள்...

ஆன்லைனில் நாம் ஒன்றாக இருக்கும் படம் வெளியிடுவேன் என கூறி பெண்ணிடம் 55 சவரன் நகைகள் பறித்த ஐடி இன்ஜினியர் கைது

18
0

சென்னை: கேளம்பாக்கம் அருகே செங்கண்மால் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், அசோக் நகரைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் (30) என்ற ஐடி இன்ஜினியர் தனது மனைவியுடன் வசிக்கிறார். அவருடைய குடியிருப்புக்கு எதிரே தரமணியில் பணிபுரியும் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). காசி விஸ்வநாதன் மனைவி வேறொரு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தினமும் வேலைக்கு சென்று விடுவார். இதேபோல் எதிர் வீட்டில் வசித்த செல்வராஜ் தரமணிக்கு வேலைக்கு செல்வார். காசி விஸ்வநாதன் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வந்தார். அப்போது செல்வராஜின் மனைவி மல்லிகாவுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் பலமுறை ஒன்றாக இருந்து அதை தனது செல்போனில் காசி விஸ்வநாதன் படம் பிடித்துள்ளார். பின்னர், அதை ஆன்லைனில் வெளியிடுவதாகவும், கணவரிடம் சொல்லி விடுவதாகவும் கூறி மல்லிகாவை மிரட்டி பலமுறை அவருடன் ஒன்றாக இருந்துள்ளார்.  பணம் மற்றும் 55 சவரனை மல்லிகா தனது கணவருக்கு தெரியாமல் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் காசியின் ெதால்லை தாங்க முடியாத மல்லிகா, தனது கணவரிடம் உண்மையை கூறி உள்ளார். இதையடுத்து, இருவரும் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து காசி விஸ்வநாதனின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஏராளமான ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் துருவி துருவி நடத்திய விசாரணையில் காசி விஸ்வநாதன் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleதொழிலதிபர் வீட்டில் 100 சவரன் கொள்ளை
Next articleபெற்ற மகளை சீரழித்த வழக்கில் தாய், கள்ளக்காதலன் சிக்கினர்