Home மற்றவை க்ரைம் லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

லாரியுடன் 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

20
0

பள்ளிப்பட்டு: ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்களிடம் இருந்து, வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி ஆந்திராவிற்கு கடத்தும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி லாரியில் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு நேற்று புகார் வந்தது. அதன்பேரில், ஆர்‌கே.பேட்டை வட்டாட்சியர் தமயந்தி, வட்ட வழங்கல் அலுவலர் சேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அவ்வழியாக ஒரு லாரி வந்தது. அதனை மடக்கி பரிசோதனை செய்ததில், லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியுடன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் 20 டன் ரேஷன் அரிசியை பள்ளிப்பட்டு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட லாரியை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மனோகர் என்பவரை கைது செய்தனர்.

Previous articleமூதாட்டியிடம் செயின் பறிப்பு
Next articleகோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ் என்று மிரட்டி சிறுமி பலாத்காரம்; பிஸ்கட் கம்பெனி டிரைவர் கைது: காதலனும் சிக்கினான்