Home தமிழகம் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கும் பிற்போக்குத்தனத்தை உ.பியிலிருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான்

மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கும் பிற்போக்குத்தனத்தை உ.பியிலிருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான்

14
0

சென்னை: மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நடத்தப்படவிருந்த பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதும், அதற்கு எதிர்ப்புக் கிளம்பியதும் அந்நிகழ்வே ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டதுமான செயல்பாடுகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. உணவுப்பழக்க வழக்கம் என்பது தனிப்பட்ட அவரவர் விருப்புரிமை சார்ந்தது; அதில் அரசோ, அரசியல் இயக்கங்களோ தலையிட்டு, இடையூறுசெய்வது என்பது அரசியலமைப்புச்சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.

மாட்டிறைச்சி உண்ணுவதற்குத் தடைவிதிக்கும் பிற்போக்குத்தனத்தை உத்திரப்பிரதேசத்திலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Previous articleநம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு 
Next articleஇலங்கையில் உள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் நம்பிக்கை