Home தமிழகம் பாசனத்திற்காக ஜூன் 12ல் மேட்டூர் திறப்பு? 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்

பாசனத்திற்காக ஜூன் 12ல் மேட்டூர் திறப்பு? 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தம்

14
0

திருக்காட்டுப்பள்ளி: காவிரி டெல்டா பாசனத்திற்காக வரும் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உள்ளதால் இந்தாண்டு 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். தண்ணீர் கல்லணைக்கு வந்தடைந்ததும் ஜூன் 16ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். கடந்த ஆண்டில் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது, கல்லணை 16ம்தேதி திறக்கப்பட்டது.நடப்பாண்டு மேட்டூரில் தற்போது நீர் இருப்பு 107 அடியாக உள்ளது. வானிலை ஆய்வாளர்களும் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர். நடப்பாண்டில் மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா மாவட்ட பாசன பகுதிகளில் 4.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் தாளடி மற்றும் சம்பா சாகுபடிகளும் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.இதையொட்டி கல்லணையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. காவிரி மற்றும் வெண்ணாற்றில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு ஷட்டர்கள் புதிதாக கடந்த ஆண்டில் மாற்றப்பட்டன. தற்போது கொள்ளிடம் ஆற்றில் உள்ள 30ஷட்டர்கள் புதிதாக மாற்றி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல பாலங்களில் புதிதாக வர்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கல்லணை பாலங்களில் உள்ள ராஜராஜசோழன், விவசாயி, அகத்தியர், கரிகாற்சோழன், காவிரி தாய் சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleசசிகலா ஆட்சியா? வரட்டும் பார்ப்போம்: பன்னீர்செல்வம் பதில்
Next articleஅரக்கோணத்தில் உயர் மின்அழுத்த கம்பியை தொடுவதாக கூறி மின்சார ரயில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர்: போலீசார் நீண்ட நேரம் போராடி மீட்டனர்