Home தமிழகம் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு 

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு 

17
0

மதுரை: நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் வி.செல்வி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 5 வார்டுகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலில் 4 வார்டுகளில் நான் உட்பட அதிமுக சார்பில் போட்டியிட்ட 4 பேர் தேர்வு செய்யப்பட்டோம். ஒரு வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டவர் வெற்றிப் பெற்றார். பின்னர் நான் ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். சுயேட்சை கவுன்சிலர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரது தூண்டுதலின் பேரில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக கோட்டாட்சியர் அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Previous articleஅரசு பேருந்துகள் மாமண்டூர் உணவகத்தில் நிற்க உத்தரவு: போக்குவரத்துறை துறை
Next articleமாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கும் பிற்போக்குத்தனத்தை உ.பியிலிருந்து இறக்குமதி செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சீமான்