Home ஜோதிடம் துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 12 முதல்...

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 12 முதல் 18ம் தேதி வரை

25
0

– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) – ராசியில் கேது – சுக ஸ்தானத்தில் சனி – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்கிரன் – ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு – சப்தம ராசியில் சூர்யன், புதன்(வ), ராகு என கிரகநிலை இருக்கிறது. இம்மாதம் 15ம் தேதி – சூர்யன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். இம்மாதம் 17ம் தேதி – செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த வாரம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். அதே வேளையில் திட்டமிடாத செயல்களால் வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்கள் வகையில் வீண் கருத்து மோதல்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும்.

துலாம், விருச்சிகம், தனுசு ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 12 முதல் 18ம் தேதி வரை

Previous articleமகரம், கும்பம், மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 18ம் தேதி வரை
Next articleIPL 2022 | டீன் ஏஜ் பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன்: திலக் வர்மா புதிய சாதனை