Home தமிழகம் சாலை நடுவில் பள்ளத்தால் விபத்து அபாயம்

சாலை நடுவில் பள்ளத்தால் விபத்து அபாயம்

12
0

நத்தம்: நத்தம் பஸ் நிலையம் அருகே சாலை நடுவில் உள்ள பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பஸ் நிலையம் அருகே திண்டுக்கல் செல்லும் சாலையில் சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் சாலையில் பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வெளியேறியது. இதனையடுத்து குழாய் உடைப்பை சரி செய்வதற்காக, தார்ச்சாலையில் குழி தோண்டி குழாயை செப்பனிடும் பணிகள் நடந்தது. ஆனால் பணி முடிந்தவுடன், குழியை முறையாக மூடவில்லை. அந்த வழியாக கனரக வாகனங்கள் சென்று வருவதால், குழாயை சீரமைக்க தோண்டிய குழி பெரும் பள்ளமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறிப்பாக டூவீலர்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Previous articleமாநகர பகுதியில் சுற்றி திரியும் மாடுகள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
Next articleரசாயன கழிவுகள் கலந்து வருவதால் கெலவரப்பள்ளி அணையில் நுங்கும் நுரையுமாக காணப்படும் தண்ணீர்