Home சினிமா நான் படமே எடுக்கலைன்னா பாராட்டு விழாவா நடத்தபோறாங்க.. உதயநிதி பதிலடி

நான் படமே எடுக்கலைன்னா பாராட்டு விழாவா நடத்தபோறாங்க.. உதயநிதி பதிலடி

20
0

திமுக ஆட்சியில் தமிழ் சினிமாவின் சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் அதிக திரைப்படங்களை வெளியிடுவதாக எழுந்துள்ள புகார் குறித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஆயுஷ்மான் குரானா நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படம், தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்தப் படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகிற 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் நெஞ்சுக்கு நீதி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த திரைப்படத்தின்  ட்ரெய்லர் தற்போது வைரலாகி வருகிறது.

இதனையொட்டி ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயின்ட் தயாரிப்பு நிறுவனங்கள் தான் அதிக திரைப்படங்களை வெளியிடுவதாக சொல்கின்றனர். விமர்சனம் செய்வோர் செய்து கொண்டே தான் இருப்பார்கள். கடந்த இரண்டாண்டுகளாக கொரோனாவால் திரையரங்குகளில் சரிவர படம் வெளியாகவில்லை. ஏற்கெனவே தயாராக இருந்த படங்களும் கூட திரையரங்குகள் திறக்காததால் வெளியாவதில் தாமதமாகின. அதனால் நான் ஏற்கெனவே தயாரித்த படங்கள் கூட இப்போதுதான் வெளியாகின்றன. இதனால் என் பேனர் படங்கள் அடுத்தடுத்து வெளியாவது போல் இருக்கிறது.

இரண்டாவது விஷயம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் என்றால் நம்பிக்கை இருக்கிறது. எங்களிடம் கணக்கு வழக்கு மிகவும் துல்லியமாக தெளிவாக இருக்கும். எங்கள் அலுவலகம் வந்து பாருங்கள், கணக்கு வழக்குக்காகவே எத்தனை பேர் வேலை பார்க்கின்றனர் எனப் பாருங்கள். அந்த நம்பிக்கையால் தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தை பலரும் அணுகுகின்றனர். அதனால் விமர்சனங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நான் படமே பண்ணாமல் இருந்தால் என்ன என்னை பாராட்டவாப் போகிறார்கள்?

தருமபுரம் ஆதீனம் பல்லக்கு விஷயத்தை செட்பேக் என்று சொல்ல முடியாது. நாங்கள் வேண்டாம் என்றோம். அவர்கள் இது மரபு, அவர்கள் பணத்துக்காக தூக்கவில்லை, விருப்பப்பட்டே செய்கின்றனர் எனக் கூறினார்கள். இந்த ஆண்டு மரபுப்படி நடக்கட்டும் அடுத்தாண்டு முன்னரே பேசி திட்டமிடுவோம் என்று முதல்வர் கூறியுள்ளார். யார் மனதும் புண்படக் கூடாது என்பதால் எடுக்கப்பட்ட முடிவு அது.

இன்னோவா காரால் குழப்பம்..

எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் தனது காரில் ஏறப் பார்த்தது குறித்தும் உதயநிதி பேசினார். சட்டசபையில் பெரும்பாலானோர் இன்னோவா கார் தான் வைத்துள்ளனர். அதனாலேயே குழப்பம் வருகிறது. கலைவாணர் அரங்கத்தில் ஒருமுறை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் என் காரில் ஏற முயன்றதாக சொன்னார்கள். அப்புறம் ஜார்ஜ்கோட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் என் காரில் மாறி ஏறப்போனது இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நானும் ஒருமுறை மாறி ஏறப்பார்த்தேன். கதவைத் திறந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் படம் இருந்தது. அதைப் பார்த்துவிட்டு நான் தவறாக மாறி ஏறப் பார்த்ததை உணர்ந்து இறங்கினேன். சட்டப்பேரவையில் அதுபற்றி கேஷுவலாகப் பேசினேன்” என்று அவர் கூறினார்.

Previous article“க்ளாமர் ரசிக்கும்படி இருக்கணும்; எங்களுக்கு சொல்ல ஆள் இல்ல” – சில்க் வாழ்க்கை குறித்து ஷர்மிலி
Next article”அந்த படம் ஓவர் டோஸ் ஆயிடுச்சு; என் பொழப்பே போயிடுச்சு“ – சிந்து சமவெளி இயக்குநர் சாமி வருத்தம்!