Home இந்தியா ம.பி: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்; கோபத்தில் கட்டடத்துக்குத் தீ வைத்த வாலிபர்- உடல் கருகி...

ம.பி: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்; கோபத்தில் கட்டடத்துக்குத் தீ வைத்த வாலிபர்- உடல் கருகி 7 பேர் பலி!

12
0

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சுபம் தீட்ஷித் (27). இவர், தான் வசித்த கட்டடத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்துவந்திருக்கிறார். பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த தீட்ஷித், அந்தப் பெண்ணை பழிவாங்க வீட்டுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். ஸ்கூட்டர் வீட்டுக்கு மிகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்ததால், தீ மளமளவென அந்தப் பெண் வசித்த கட்டடத்துக்குப் பரவியது.

அதிகாலை 3 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததால், இரண்டு மாடிகள்கொண்ட அந்தக் கட்டடத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களால் தீ விபத்தின்போது தப்பிச்செல்ல முடியவில்லை. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தீ விபத்து

ஆனால், அதற்குள் கட்டடத்துக்குள் இருந்த 7 பேர் உடல் கருகி இறந்துவிட்டனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள கட்டடத்துக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தீட்ஷித் ஸ்கூட்டருக்கு தீ வைப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது.

போலீஸ்

இதையடுத்து அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியபோதுதான், அந்தக் கட்டடத்தில் வசிக்கும் பெண் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைத்ததாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அவர்மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடுமையான வெயிலின் தாக்கம்: மகாராஷ்டிராவில் 25 பேர் பலி!
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வசிப்பவர் சுபம் தீட்ஷித் (27). இவர், தான் வசித்த கட்டடத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவரை ஒருதலையாகக் காதலித்துவந்திருக்கிறார். பின்னர், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் சென்று தனது காதலை தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தப் பெண் அதை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு அந்தப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த தீட்ஷித், அந்தப் பெண்ணை பழிவாங்க வீட்டுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். ஸ்கூட்டர் வீட்டுக்கு மிகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்ததால், தீ மளமளவென அந்தப் பெண் வசித்த கட்டடத்துக்குப் பரவியது.
அதிகாலை 3 மணிக்கு இந்தச் சம்பவம் நடந்ததால், இரண்டு மாடிகள்கொண்ட அந்தக் கட்டடத்தில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்களால் தீ விபத்தின்போது தப்பிச்செல்ல முடியவில்லை. தீ விபத்து குறித்து கேள்விப்பட்டு தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துஆனால், அதற்குள் கட்டடத்துக்குள் இருந்த 7 பேர் உடல் கருகி இறந்துவிட்டனர். மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவந்தனர். தீ விபத்துக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள கட்டடத்துக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தீட்ஷித் ஸ்கூட்டருக்கு தீ வைப்பது தெளிவாகப் பதிவாகியிருந்தது.
போலீஸ் இதையடுத்து அவரைக் கைதுசெய்து விசாரணை நடத்தியபோதுதான், அந்தக் கட்டடத்தில் வசிக்கும் பெண் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைத்ததாக தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அவர்மீது கொலைக்கு நிகரான வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரித்துவருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடுமையான வெயிலின் தாக்கம்: மகாராஷ்டிராவில் 25 பேர் பலி!

Previous articleமுல்லை பெரியாறு: மத்திய கண்காணிப்புக் குழு ஆய்வு; பேபி அணையை பலப்படுத்த அனுமதி கிடைக்குமா?
Next articleSuriya in Vikram Movie: போடு! தகிட.. தகிட… விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. இந்த ரோலில் சூர்யாவா?