Home இந்தியா மின்தடையால் வந்த குழப்பம்: மத்தியப்பிரதேசத்தில் மணப்பெண்களை மாற்றித் திருமணம் செய்த மணமகன்கள்!

மின்தடையால் வந்த குழப்பம்: மத்தியப்பிரதேசத்தில் மணப்பெண்களை மாற்றித் திருமணம் செய்த மணமகன்கள்!

11
0

நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயில் சுட்டெரிப்பதால் மின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டால் திருமணத்தில் மணமக்களே மாறிய சம்பவம் நடந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ரமேஷ் ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படி இரு வேறு குடும்பங்களைச் சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்கள் கிடைத்தனர். இதையடுத்து இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்துக்கு ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.

திருமணத்தின்போது மணப்பெண்கள் முக்காடு போட்டு மூடப்பட்டு இருந்தனர். அதோடு இரண்டு பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர். திருமணச் சடங்கு முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் திருமணச் சடங்குகள் நடைபெறும்போது இருட்டில் மணப்பெண்கள் மாறிவிட்டனர்.

மணமகளுடன் கணேஷ்

அக்னியைச் சுற்றி வரும்போதுகூட பண்டிதரும் இதை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றிச் சுற்றிவரும்படி செய்துவிட்டார். திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் தாங்கள் போட்டிருந்த முக்காடை அகற்றினர். முக்காடை அகற்றியதும் மணமகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. `நான் இந்தப் பெண்ணைப் பார்க்கவில்லையே… எப்படி மணப்பெண் மாறினார்…’ என்று கேட்டு பெண் வீட்டாருடன் சண்டை போட்டார். இறுதியில் மின்தடையால் மணப்பெண் மாறிவிட்டதை இரு மாப்பிள்ளைகளுக்கும் சொல்லி சமாதானப்படுத்துவதற்குள் பெண் வீட்டாருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இது குறித்து திருமணத்தை நடத்திவைத்த புரோகிதரிடம் கூறியபோது மீண்டும் ஒரு முறை சடங்கை நடத்திவிடலாம் என்று கூறி மீண்டும் திருமணச் சடங்கை நடத்திவைத்தார். இந்தத் திருமணத்தால் ஒரே குழப்பம் ஏற்பட்டு பின்னர் சமாதானத்தில் முடிவடைந்தது.

நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெயில் சுட்டெரிப்பதால் மின் தேவை அதிகரித்திருக்கிறது. இதனால் அடிக்கடி மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டால் திருமணத்தில் மணமக்களே மாறிய சம்பவம் நடந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், உஜ்ஜைனி நகரைச் சேர்ந்த ரமேஷ் லால் என்பவருக்கு நிகிதா, கரிஷ்மா ஆகிய இரண்டு மகள்கள் இருந்தனர். இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ரமேஷ் ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படி இரு வேறு குடும்பங்களைச் சேர்ந்த கணேஷ், தங்க்வாரா ஆகிய இரண்டு மணமகன்கள் கிடைத்தனர். இதையடுத்து இரண்டு பெண்களுக்கும் ஒரே மேடையில் திருமணத்துக்கு ரமேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.
திருமணத்தின்போது மணப்பெண்கள் முக்காடு போட்டு மூடப்பட்டு இருந்தனர். அதோடு இரண்டு பெண்களும் ஒரே மாதிரியான ஆடைகள் அணிந்திருந்தனர். திருமணச் சடங்கு முழுவேகத்தில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது. இதனால் திருமணச் சடங்குகள் நடைபெறும்போது இருட்டில் மணப்பெண்கள் மாறிவிட்டனர்.
மணமகளுடன் கணேஷ்அக்னியைச் சுற்றி வரும்போதுகூட பண்டிதரும் இதை கவனிக்காமல் மணப்பெண்களை மாற்றிச் சுற்றிவரும்படி செய்துவிட்டார். திருமணம் முடிந்து இரு பெண்களும் தங்களது கணவன் வீட்டுக்குச் சென்ற பிறகுதான் தாங்கள் போட்டிருந்த முக்காடை அகற்றினர். முக்காடை அகற்றியதும் மணமகனுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. `நான் இந்தப் பெண்ணைப் பார்க்கவில்லையே… எப்படி மணப்பெண் மாறினார்…’ என்று கேட்டு பெண் வீட்டாருடன் சண்டை போட்டார். இறுதியில் மின்தடையால் மணப்பெண் மாறிவிட்டதை இரு மாப்பிள்ளைகளுக்கும் சொல்லி சமாதானப்படுத்துவதற்குள் பெண் வீட்டாருக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இது குறித்து திருமணத்தை நடத்திவைத்த புரோகிதரிடம் கூறியபோது மீண்டும் ஒரு முறை சடங்கை நடத்திவிடலாம் என்று கூறி மீண்டும் திருமணச் சடங்கை நடத்திவைத்தார். இந்தத் திருமணத்தால் ஒரே குழப்பம் ஏற்பட்டு பின்னர் சமாதானத்தில் முடிவடைந்தது.

Previous articleபாலியல் வழக்கு: நடிகை காவ்யா மாதவனிடம் வீட்டுக்கே சென்று விசாரணை! – அடுத்தது என்ன?
Next articleகேரளா: தோண்டி எடுக்கப்பட்ட யூடியூபர் ரிஃபா உடல்… மர்ம மரணம் குறித்து போலீஸ் தீவிர விசாரணை!