Home இந்தியா `தாஜ் மஹால் சிவாலயமா?’ – 22 அறைகளை திறக்க உத்தரவிடக்கோரி பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு!

`தாஜ் மஹால் சிவாலயமா?’ – 22 அறைகளை திறக்க உத்தரவிடக்கோரி பாஜக நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு!

22
0

இந்திய வரலாற்றில் தாஜ் மஹாலின் அழகை வர்ணித்து எழுதாத கவிதையாளரும், பாடலாசிரியரும் மிக அரிதாகத்தான் இருக்க முடியும். இந்தியாவின் அடையாளமாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ‘காதல் சின்னம்’ தாஜ் மஹாலை ஒரு அதிகாலை பொழுதில் ஒரு ரசனையாளர் பார்த்தால், அப்படியே உறைந்தே போவார். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தாஜ் மஹால் ஒரு கல்லறை என்பதையும் தாண்டி, அதன் கட்டடக் கலையை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சர்யமாக பார்க்கிறது.

தாஜ் மஹாலின் கட்டடக் கலை

இந்தியாவுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டுத் தலைவர்கள் தாஜ் மஹாலைத் தங்கள் குடும்பத்தினருடன் கண்டு ரசிக்கிறார்கள். அவ்வளவு ஏன், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்கூட தன் மனைவி மெலானியாவுடன் தாஜ் மஹால் நடைபாதையில் கைகோத்து நடந்து, அதன் அழகை ரசித்தார். தாஜ் மஹாலின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவை குறித்து ட்ரம்ப்புடன் வந்த மொழிபெயர்ப்பாளர் அவருக்கு விளக்கிக் கூறினார். பின்னர் தாஜ் மஹால் முன்பாக தம்பதியினர் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஏற்கெனவே டெல்லி, உ.பி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிலவும் காற்று மாசு, நீர் மாசு காரணமாகத் தனது பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், 2017-ல் உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர், ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் தாஜ் மஹால் அந்த மாநிலத்தின் சுற்றுலாத் தலத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை கடுமையாக இருந்தாலும், தாஜ் மஹால் இந்தியக் கட்டடக் கலை வகையில்லை என உ.பி அரசு எளிமையாகக் கடந்து சென்றது.

மோடி – யோகி ஆதித்யநாத்

உ.பி-யில் 2017-ம் ஆண்டுக்கு முன்பாக (பா.ஜ.க ஆட்சிக்கு முன்பு) தாஜ் மஹால் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. நீர், காற்று மாசுகளிலுருந்து தாஜ்மஹாலை பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசு நீதிமன்றத்தில் பலமுறை குட்டு வாங்கியிருந்தாலும், ஓரளவுக்கு பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தி வந்தது.

‘தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்’: பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்து

ஆனால், யோகி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, தாஜ் மஹாலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், பராமரிப்பு நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு அரசு தரப்பில் மறுப்பும் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது.

தாஜ் மஹாலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்தும், தேசியப் பாதுகாப்புப் படை பாதுகாத்தும் வருகிறது. இதற்கிடையே, நதிக்கரையிலிருந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டுதான், அதில் தாஜ் மஹால் கட்டப்பட்டிருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, இந்துத்துவா அமைப்பினர் சமுக வலைதளங்களில் தாஜ் மஹாலை, ‘தேஜோ மஹால்’ என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

யமுனை நதிக்கரையில் தாஜ் மஹால்

தாஜ் மஹால் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி அதற்குப் பூஜை செய்யவும் பலமுறை முயன்றனர். சமீபத்தில் அயோத்தியிலிருக்கும் ஒரு மடத்தின் தலைவரான பரமஹன்ஸ் தாஸ், தாஜ் மஹாலைத் தான் புனிதப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அங்கு சென்றார். மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சிறு சாமியார்கள் இத்தகைய முயற்சிகளால் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்துத்துவா அமைப்பினரின் கருத்தை பா.ஜ.க எம்.பி வினய் கட்டியார் 2017-ம் ஆண்டு தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில்தான், தாஜ் மஹாலில் சுமார் 22 அறைகள் பூட்டியே இருப்பதாகவும், அவற்றை திறந்து இந்துக் கடவுள்களின் சிலைகள், கல்வெட்டுப் பதிவுகள் ஏதேனும் இருக்கின்றனவா எனப் பார்க்க தொல்லியல் ஆய்வு மையத்துக்கு உத்தரவிடவேண்டும் என உ.பி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகி ரஜ்னீஷ்சிங் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்குத் தொடுத்தார். தாஜ் மஹால் மீது வழக்கு தொடுக்கப்படுவது இது முதல்முறையில்லை. முன்னதாக, 2000-ம் ஆண்டு, 2015-ம் ஆண்டு எனப் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆனால், அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. இதை வரவேற்று இந்து மகா சபாவினர் தாஜ் மஹால் முன்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடியிருக்கின்றனர்.

இந்த வழக்கில் உ.பி அரசு வழக்கறிஞரும் வாதிட இருப்பதால், வழக்கின் போக்கை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Taj Mahal மூலம் தன் துக்கத்தை உலகின் நினைவில் நிறுத்திய Shah Jahan!|இன்று, ஒன்று, நன்று – 22
இந்திய வரலாற்றில் தாஜ் மஹாலின் அழகை வர்ணித்து எழுதாத கவிதையாளரும், பாடலாசிரியரும் மிக அரிதாகத்தான் இருக்க முடியும். இந்தியாவின் அடையாளமாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள யமுனை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ‘காதல் சின்னம்’ தாஜ் மஹாலை ஒரு அதிகாலை பொழுதில் ஒரு ரசனையாளர் பார்த்தால், அப்படியே உறைந்தே போவார். பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தாஜ் மஹால் ஒரு கல்லறை என்பதையும் தாண்டி, அதன் கட்டடக் கலையை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சர்யமாக பார்க்கிறது.
தாஜ் மஹாலின் கட்டடக் கலைஇந்தியாவுக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டுத் தலைவர்கள் தாஜ் மஹாலைத் தங்கள் குடும்பத்தினருடன் கண்டு ரசிக்கிறார்கள். அவ்வளவு ஏன், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்ப்கூட தன் மனைவி மெலானியாவுடன் தாஜ் மஹால் நடைபாதையில் கைகோத்து நடந்து, அதன் அழகை ரசித்தார். தாஜ் மஹாலின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவை குறித்து ட்ரம்ப்புடன் வந்த மொழிபெயர்ப்பாளர் அவருக்கு விளக்கிக் கூறினார். பின்னர் தாஜ் மஹால் முன்பாக தம்பதியினர் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் ஏற்கெனவே டெல்லி, உ.பி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிலவும் காற்று மாசு, நீர் மாசு காரணமாகத் தனது பொலிவைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய சூழலில், 2017-ல் உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின்னர், ஆண்டுதோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் தாஜ் மஹால் அந்த மாநிலத்தின் சுற்றுலாத் தலத்திலிருந்து நீக்கப்பட்டது. இதற்கு எதிர்வினை கடுமையாக இருந்தாலும், தாஜ் மஹால் இந்தியக் கட்டடக் கலை வகையில்லை என உ.பி அரசு எளிமையாகக் கடந்து சென்றது.
மோடி – யோகி ஆதித்யநாத்உ.பி-யில் 2017-ம் ஆண்டுக்கு முன்பாக (பா.ஜ.க ஆட்சிக்கு முன்பு) தாஜ் மஹால் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வந்தது. நீர், காற்று மாசுகளிலுருந்து தாஜ்மஹாலை பாதுகாக்கத் தவறியதற்காக மாநில அரசு நீதிமன்றத்தில் பலமுறை குட்டு வாங்கியிருந்தாலும், ஓரளவுக்கு பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்தி வந்தது.
‘தாஜ்மஹால் ஓர் இந்துக் கோயில்’: பா.ஜ.க எம்.பி., சர்ச்சைக் கருத்துஆனால், யோகி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு, தாஜ் மஹாலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், பராமரிப்பு நிதி முறையாக ஒதுக்கப்படுவதில்லை என்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு அரசு தரப்பில் மறுப்பும் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது.
தாஜ் மஹாலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்தும், தேசியப் பாதுகாப்புப் படை பாதுகாத்தும் வருகிறது. இதற்கிடையே, நதிக்கரையிலிருந்த சிவன் கோயில் இடிக்கப்பட்டுதான், அதில் தாஜ் மஹால் கட்டப்பட்டிருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, இந்துத்துவா அமைப்பினர் சமுக வலைதளங்களில் தாஜ் மஹாலை, ‘தேஜோ மஹால்’ என்று குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
யமுனை நதிக்கரையில் தாஜ் மஹால்தாஜ் மஹால் வளாகத்தில் சிவன் சிலை இருப்பதாகக் கூறி அதற்குப் பூஜை செய்யவும் பலமுறை முயன்றனர். சமீபத்தில் அயோத்தியிலிருக்கும் ஒரு மடத்தின் தலைவரான பரமஹன்ஸ் தாஸ், தாஜ் மஹாலைத் தான் புனிதப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அங்கு சென்றார். மேலும், கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான சிறு சாமியார்கள் இத்தகைய முயற்சிகளால் கைதும் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்துத்துவா அமைப்பினரின் கருத்தை பா.ஜ.க எம்.பி வினய் கட்டியார் 2017-ம் ஆண்டு தெரிவித்தது பெரும் சர்ச்சையானது.
இந்த நிலையில்தான், தாஜ் மஹாலில் சுமார் 22 அறைகள் பூட்டியே இருப்பதாகவும், அவற்றை திறந்து இந்துக் கடவுள்களின் சிலைகள், கல்வெட்டுப் பதிவுகள் ஏதேனும் இருக்கின்றனவா எனப் பார்க்க தொல்லியல் ஆய்வு மையத்துக்கு உத்தரவிடவேண்டும் என உ.பி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.க நிர்வாகி ரஜ்னீஷ்சிங் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழக்குத் தொடுத்தார். தாஜ் மஹால் மீது வழக்கு தொடுக்கப்படுவது இது முதல்முறையில்லை. முன்னதாக, 2000-ம் ஆண்டு, 2015-ம் ஆண்டு எனப் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
உயர் நீதிமன்றத்தில் வழக்குஆனால், அந்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலையில், தற்போது தொடரப்பட்டிருக்கும் வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கிறது. இதை வரவேற்று இந்து மகா சபாவினர் தாஜ் மஹால் முன்பாக இனிப்புகள் வழங்கி கொண்டாடியிருக்கின்றனர்.
இந்த வழக்கில் உ.பி அரசு வழக்கறிஞரும் வாதிட இருப்பதால், வழக்கின் போக்கை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Taj Mahal மூலம் தன் துக்கத்தை உலகின் நினைவில் நிறுத்திய Shah Jahan!|இன்று, ஒன்று, நன்று – 22

Previous article3 சென்ட் நிலத்துடன் 3 பெட்ரூம் வீடு ரூ.2000… கேரளாவை அதிர வைத்த தம்பதியின் பலே கூப்பன் திட்டம்!
Next articleபாலியல் வழக்கு: நடிகை காவ்யா மாதவனிடம் வீட்டுக்கே சென்று விசாரணை! – அடுத்தது என்ன?